தாய்லாந்தில் பயங்கர குண்டு தாக்குதல் – பரிதாபகரமாக அறுவர் பலி

0
130

தாய்லாந்தின் பட்டானி பிரதேசத்தில் வீதியின் ஓரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டொன்று வெடித்ததில் தாய்லாந்து படையினர் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

பயங்கரவாதிகள் சிலரால் இந்த குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

2004ஆம் ஆண்டு தொடக்கம் அந்நாட்டில் இடம்பெற்றுவரும் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக இதுவரை ஆறாயிரத்து 500க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, லண்டனில் இன்று அதிகாலை இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்தவர்களின் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த 8 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments

comments