பாகிஸ்தானுடனான ஒருநாள் கிரிக்கட் தொடரில் இருந்து மலிங்க நீக்கம்

0
1263

malinga

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் தொடரில், வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இணைத்துக் கொள்ளப்பட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் அணித் தேர்வுக் குழு இதனை அறிவித்துள்ளது.

காயத்தினால் 19 மாதகால ஓய்வில் இருந்த லசித் மலிங்க, இந்த வருட ஆரம்பத்தில் மீண்டும் ஒருநாள் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார்.
எனினும் அவர் விளையாடிய 13 போட்டிகளில் 10 விக்கட்டுகளை மாத்திரமே பெற்றுள்ளதுடன், 62.3 என்ற மோசமான பந்துவீச்சு சராசரியையும் கொண்டுள்ளார்.

இந்தநிலையிலேயே அவருக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement