லசந்தவின் படுகொலையின் பின்புலத்தில் ராஜபக்ஷர்கள் : அடித்துக் கூறுகிறார் சுஜிவ சேனசிங்க

0
87

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையின் பின்புலத்தில் ராஜபக்ஷர்களே இருக்கின்றார்கள் என்று இராஜாங்க அமைச்சரான சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

லசந்த விக்கிரமதுங்க
லசந்த விக்கிரமதுங்க

இன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியாலர் மாநாட்டில் கலந்துகொண்டுஉரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“”லசந்த விக்கிரமதுங்க துப்பாக்கியால் சுடப்பட்டே படுகொலை செய்யப்பட்டார் என்றே கூறப்பட்டிருந்தது. அவர் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டே படுகொலைச் செய்யப்பட்டார் என்று ஐ.தே.க வலியுறுத்தியிருந்தது.
இந்தப் படுகொலையின் பின்னணியில் ராஜபக்ஷக்களே உள்ளனர். அன்று இவர்களைத் தவிர இக்கொலையை செய்ய வேண்டிய தேவை எவருக்கும் இருந்திருக்கவில்லை. படுகொலைத் தொடர்பில் செய்தி வெளியிட வேண்டாம் என்று வெளிநாட்டு ஊடகங்களுக்கும் அன்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

லசந்தவின் படுகொலையில் வெளிவந்துள்ள இரண்டு மரண அறிக்கைகள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ள அரசு தயாராகவே உள்ளது என்றார்.

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பிலான விசாரணை கடந்த திங்களன்று கல்கிசை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டே இவர் படுகொலை செய்யப்பட்டதாக மேற்படி நீதிமன்றில் குற்றப்புலனாய்வு குழு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com