றிப்கான் பதியூதீன் இராஜினாமா

0
32

றிப்கான் பதியூதீன் இராஜினாமா.

றிப்கான் பதியூதீன்

மத்திய அமைச்சர் ரிசாட். பதியூதீனின் சகோதரரும் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினருமான றிப்கான் பதியூதீன் தனது பதிவியை இன்று இராஜினாமா செய்துள்ளார் .

வடக்கு மாகாண சபையின் 107 ஆவது அமர்வு இன்று கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம. தலைமையில் நடைபெற்றது.

இதன் போது தனது உறுப்பினர் பதவியை தான் இராஐனாமா செய்வதாகவும் தன்னுடைய அந்த இடத்திற்கு தங்களது கட்சியில் போட்டியிட்டு வாக்குகளின் அடிப்படையில் அடுத்த நிலையில் உள்ள ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் தனக்கு வாக்களித்த மக்களுக்கும் தன்னுடன் இணைந்து செயற்பட்ட அனைவருக்கும் நன்றிகளையும் தெருவித்துள்ளார்.

இனமத பேதங்களின்றி தான் செயற்பட்டதாகவும் அதே போன்று முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்கள் தொடர்ந்தும் செயற்பட்டு காணிப் பிரச்சனை முதல் அனைத்துப் பிரச்சைகளுக்கும் சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டுமென்றும் இதன் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments