ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி முக்கிய போட்டிகளை சந்திக்கும் நிலையில் டுபாய் பறந்தார் ஸ்மித்

0
61

ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி முக்கிய போட்டிகளை சந்திக்கும் நிலையில் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 6 நாட்கள் ஓய்வாக தனது குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார்.

ஐ.பி.எல். சீசன் 10 ரி20 கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 5 போட்டிகளில் விளையாடியுள்ளது. இரண்டு வெற்றி, மூன்று தோல்விகள் மூலம் நான்கு புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது.

கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற பெங்களூருவிற்கு எதிரானப் போட்டியில் புனே அணி வெற்றிபெற்றது. 17ஆம் திகதிக்கு பின்னர் ரைசிங் புனே அணி 22ஆம் திகதி (நாளை) ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. 24ஆம் திகதி மும்பை அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், அந்த அணியின் தலைவரான ஸ்மித் குடும்பத்துடன் ஒரு வாரம் ஓய்விற்காக துபாய் சென்றுள்ளார். இதனால் அவர் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 26ஆம் திகதி கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் கலந்துகொள்கிறார்.

வயிற்று வலி காரணமாக ஏற்கனவே ஏப்ரல் 11ஆம் திகதி டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிராகப் போட்டியில் ஸ்மித் கலந்து கொள்ளவில்லை.

புனே அணிக்கு இன்னும் 9 போட்டிகள் உள்ளன. இதில் 7 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால்தான் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement