ரிஷப் பான்ட்டைக்கு தெண்டுல்கர் பாராட்டு

0
35

ரிஷப் பான்ட்டைக்கு தெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். ரி20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய டெல்லி வீரர் ரிஷப் பான்ட்டை கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.

குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் வீரர் ரி‌ஷப் பான்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 43 பந்தில் 97 ஓட்டங்களை எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 9 சிக்சர்களும் அடங்கும். ஜார்க்கண்டை சேர்ந்த 19 வயதான அவரது ஆட்டத்தை அனைவரும் பாராட்டி உள்ளனர்.

ஐ.பி.எல். வரலாற்றில் நான் பார்த்த சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என்று ரி‌ஷப் பான்ட்டை கிரிக்கெட் சகாப்தம் தெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement