ரியல் மெட்ரிடை வீழ்த்தியது பார்ஸிலோனா : மெஸ்ஸி 500 கோல்கள்

0
43

ரியல் மெட்ரிடை வீழ்த்தி பார்ஸிலோனா அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.

லா லீகா தொடரில் முன்னிலை பெற்றிருந்த ரியல் மெட்ரிட் லியனல் மெஸியின் அபார கோல் மூலமே பார்ஸிலோனா வீழ்த்தியது.

ரியல் மெட்ரிட் கழகத்தின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 3  –  2 என்ற கோல் கணக்கில் பார்ஸிலோனா அணி வெற்றியை தனதாக்கியது.

போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலை போட்டு, சமநிலை பெற்றிருந்தன. இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் விளையாடியதுடன், 73 ஆவது நிமிடத்தில் பார்ஸிலோனா அணி இரண்டாவது கோலை போட்டு முன்னிலை பெற்றிருந்தது.

ரியல் மெட்ரிட் அணி சார்பில் ஜேம்ஸ் ரொட்ரிக்கஸ் 85 ஆவது நிமிடத்தில் கோலைலொன்றை போட்ட நிலையில் போட்டி மீண்டும் சமநிலை பெற்றது.

போட்டியின் இறுதியில் அபார திறமையை வெளிப்படுத்திய லியனல் மெஸி, மேலதிக உபாதை நேரத்தில் கோலொன்றை போட்டதன் மூலம் பார்ஸிலோனா அணி, போட்டியில் 3 – 2 என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கியது.

ரியல் மெட்ரிடை

இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் பிரகாரம் பார்ஸிலோனா மற்றும் ரியல் மெட்ரிட் கழக அணிகள் தலா 75 புள்ளிகளை பெற்றுள்ள போதிலும், கோல் எண்ணிக்கை வித்தியாசத்தின் அடிப்படையில் பார்ஸிலோனா அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

லா லீகா கால்பந்தாட்ட தொடரில் பார்சிலோனா அணிசார்பில் லியனல் மெஸி தனது 500 ஆவது கோலை இந்தப் போட்டியில் எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web – universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com