ராஜசேகர் – ஜீவிதாவின் மகள் ஷிவானி கதாநாயகியாக அறிமுகம்

0
90

இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு ‘ இது தாண்டா போலீஸ் ‘ போன்ற பல வெற்றி படங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்த நடிகர் DR.ராஜ சேகர் மற்றும் ‘ கடமை கண்ணியம் கட்டுப்பாடு ‘ போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையான ஜீவிதாவின் மகள் ஷிவானி ராஜசேகர்.

ஷிவானி தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். இது தொடர்பில் அவர் கூறுகையில்,

சின்ன வயதில் இருந்தே பரதநாட்டியம், குச்சிபிடி போன்ற நடன வகுப்புகளுக்கு சென்று வருகிறேன். இசையிலும் எனக்கு ஆர்வம் உண்டு.

தனுஷை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த 3 படத்தை பார்த்து எமோஷனல் ஆகி அழுது இருக்கிறேன். விஷாலை எனக்கும் மிகவும் பிடிக்கும் அவர் மேன்லியாக இருப்பார். அவர் எங்கள் குடும்ப நண்பரும் கூட.

நடிகர் விஜய் சேதுபதி செம ஆக்டர். அவரை பிடிக்கும். அவர் நடிக்கும் படம் சென்சிபிலாக இருக்கும். அப்பா தான் என்னுடைய ஆள் டைம் ஹீரோ, அப்பா அம்மா சேர்ந்து நடித்த படங்களை ஒண்ணு விடாமல் பார்த்திருக்கிறேன். முதலில் டாக்டர் ஆகிவிட்டு அப்புறம் ஆக்டர் ஆகிவிடுவோம் என்கிறார் ஷிவானி.

Comments

comments