ரஷ்யா வான்வழித் தாக்குதல் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி

0
24

ரஷ்யா வான்வழித் தாக்குதல்சிரியாவின் கிழக்கு பிரதேசத்தில் ரஷ்ய வானுர்திப்படையினர் மேற்கொண்டுவரும் வான்வழித் தாக்குதல்களால் கடந்த 24 மணிநேரத்தில் 120க்கும் அதிகமான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்ய பாதுகாப்புத் தரப்பினரால் வெளியிடப்பட்ட தகவல்களை மேற்கோள்காட்டி சர்வசே ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதுதவிர கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கூலிப்படைகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டியஸ் அஸ் ஸோர்  பிராந்தியத்தின் அல் மயாதீன் பகுதியில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 80 பேரும் அல் புகாமல்  எல்லை பிராந்திய நகர் பகுதியில் 40 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட வெளிநாட்டு கூலிப்படைகளில் பெரும்பாலானவர்கள் சோவியத் யூனியன் டியுனீசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

 

 

Comments

comments