ரவுப் ஹக்கீம் கொழும்பு மாநகர எல்லைக்குள் குடிநீர் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்காக புதியதொரு திட்டம்

0
66
ரவுப் ஹக்கீம்
ரவுப் ஹக்கீம்

கொழும்பு மாநகர எல்லைக்குள் குடிநீர் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்காக புதியதொரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர எல்லைக்குள் குடிநீர் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்காக புதியதொரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீர் வழங்கல் சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தை வெளியிடம் வைபவத்தில் அமைச்சர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இதன்மூலம் கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிக்கக்கூடியதாக இருக்குமென்றும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

புதிய திட்டத்தின் கீழ் கொhழும்பு நீர் விநியோக குழாய் வலைப்பின்னலில் பழைய குழாய்கள் அகற்றப்பட்டு புதிய குழாய்கள் பொருத்தப்படும். இந்த திட்டத்திற்கு ஜப்பானின் ஒத்துழைப்பு அமைப்பான ஜெய்க்கா உதவி செய்கிறது. புதியத் திட்டத்தின் கட்டுமான பணிகள் காரணமாக மக்கள் குறுகிய கால இடைஞ்சல்களை எதிர்கொள்ள நேரிடலாம். இவற்றைi பொறுத்துக்கொள்வது அவசியமென நீர்வழங்கலுக்கு அமைச்சு அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com