ரவி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என் மீது சுமத்தப்பட்டிருந்தால் பதவி விலகியிருப்பேன்

0
13

ரவி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என் மீது சுமத்தப்பட்டிருந்தால் பதவி விலகியிருப்பேன் என்று பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசில் கள்வர்கள் இருக்கின்றார்கள் என அம்பலப்படுத்திய போது சிலர் எனக்கு அழுத்தம் பிரயோகித்தனர். சிலர் விலகிச் செல்லுமாறும் கூறினார்கள்.

தற்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் யார் விலகிச் செல்லப் போகின்றார்கள் என்பது தொடர்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் விசாரணை ஆணைக்குழுக்கள் இருக்கவில்லை.

இந்த அரசு சுயாதீனமான முறையில் விசாரணைகளை நடத்துகின்றது. கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் எவ்வளவு கள்வர்கள் இருந்தார்கள். எனினும் இந்த அரசு சுயாதீனமாக முறைப்பாடு குறித்தும் விசாரணை நடத்துகின்றது என்றும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments