ரவி குறித்த முடிவை இரண்டு வாரத்தில் ஜனாதிபதி அறிவிப்பார்

0
32

சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி விவகாரம் மற்றும் சொகுசு வீடு தொடர்பில் விசாரணைகளில் சிக்கியுள்ள வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க குறித்து இரண்டு வாரங்களில் தனது தீர்மானத்தை அறிவிப்பார் என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்ம் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அரச விவசாய அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இக்குழுவின் விசாரணைகளில் தற்போது வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியே பிணைமுறி மோசடி தொடர்பில் முதலாவது முறைப்பாடளித்திருந்தது.

மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சு.க எப்போதும் செயற்படும். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசீலித்து வருகிறார். இன்னும் இரண்டுவாரத்தில் தனது இறுதி முடிவை அறிவிப்பார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் நாட்டின் எதிர்காலத்தையும் இரண்டு கட்சிகள் தொடர்ந்து தேசிய அரசில் செயற்படுவதையும் அடிப்படையாகவே கொண்டு ஜனாதிபதி தீர்மானிப்பார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com