ரவி குறித்த அரசின் நிலைப்பாடு வியாழக்கிழமை வெளியாகும் : சபாநாயகர் அறிவிப்பு

0
27

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக பொது எதிரணியால் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த அறிவிப்பை எதிர்வரும் வியாழக்கிழமை தெரிவிப்பதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார்.

ரவி குறித்த

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நாடாளுமன்றில் எழுப்பி கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் 32 பேரின் கையொப்பத்துடன், கூட்டு எதிரணி கடந்த வியாழக்கிழமை சபாநாயகரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரவி குறித்த

சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடியில் ரவி கருணாநாயக்க தொடர்பு பட்டிருப்பதற்கான காரணிகள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதால் அவருக்கு எதிரான அதிர்வலை நாட்டில் அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments