ரவி கருணாநாயக்கவின் முடிவை வரவேற்பு சம்பந்தன்

0
20

வெளிவிவகார அமைச்சர் பதவியில் ரவி கருணாநாயக்க இருந்து விலகியமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்பளித்துள்ளார்.

ரவி கருணாநாயக்கவின் இராஜனாமாவை அடுத்து நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்,

அமைச்சர் பதவியில் இருந்து விலகும் ரவி கருணாநாயக்கவின் முடிவு ஒரு துணிச்சலான நகர்வு. இவர் தவறு செய்ததாக தகுதிவாய்ந்த நீதிமன்றத்தினால் கண்டறியப்படவில்லை.

நாட்டினதும் மற்றும் நல்லாட்சி அரசாங்கம் என்ற பதாதையின் கீழ் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினதும் நலன் கருதி அவர் பதவியை விட்டு விலகும் முடிவை எடுத்திருப்பதை வரவேற்கிறேன்” என்று கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com