டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசை ; ஜடேஜா முதலிடம்

0
134

டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய அணியின் இடதுகை மிதவேகப் பந்துவீச்சாளரான ரவிந்திர ஜடேஜா, சக நாட்டு வீரரான ரவிச்சந்திரன் அஸ்னை பின்தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ரவிந்திர ஜடேஜா
ரவிந்திர ஜடேஜா

தரவரிசை பட்டியலில் 899 புள்ளிகளுடன் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 862 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இலங்கையின் ரங்கன ஹேரத் 854 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், அவுஸ்ரேலியாவின் ஜோஸ் ஹசில்வுட் 842 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 810 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் ஆரம்ப இருபோட்டிகளில் சிறப்பான பந்து வீச்சை பதிவுசெய்ததன் மூலம் முதல் இடத்தை ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் பகிர்ந்துக்கொண்டிருந்தனர். ஆனால், மூன்றாவது போட்டியில் அஸ்வின் சோபிக்காததன் காரணமாக அவர் இரண்டாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.

அஸ்வின்
அஸ்வின்

ராஞ்சியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின், இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தமாக 9 விக்கெட்களை ஜடேஜா வீழ்த்தினார். அஸ்வின் இரு இன்னிங்சிலும் சேர்த்து இரண்டு விக்கெட்டுகள் மாத்திரமே கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement