ரயில் சேவைகள் இரத்து; பயணிகள் பாதிப்பு

0
32

பல்வேறு கோரிக்கைகைளை முன்வைத்து ரயில் சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று(07) காலை முதல் ரயில் பயணிகள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

கொழும்பின் பிரதான ரயில் சேவைகள் இடம்பெறவில்லை என்று கம்பஹா ரயில் நிலைய பயணிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், கொழும்பு நோக்கி மாத்திரம் சில ரயில் சேவைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு நோக்கி வந்துள்ள பல ரயில்களின் சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதுடன், தூர ரயில் சேவைகளும் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலியிலிருந்து புறக்கோட்டை நோக்கி புறப்படவிருந்த ரயில், சேவையில் ஈடுபடவில்லை என, காலி ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement