ரயில்வே ஊழியர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

0
35

           ரயில்வே ஊழியர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

சிவப்பு எச்சரிக்கை

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (11) நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் சேவைக்கு சமூகமளிக்காதவிடத்து சம்பந்தப்பட்ட சகல ஊழியர்களும் சேவையிலிருந்து நீங்கிக் கொண்டவர்களாக கருதப்படுவர் என போக்குவரத்து அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7ஆம் திகதியிலிருந்து இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதியினால் நேற்று முன்தினம் முதல் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com