ரயில்முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை – பத்தனை பொலிஸார் தீவிர புலன் விசாரணை

0
15

ரயில்முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பமொன்று கொட்டகலை ரயில்வே கடவைக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற ரயில் முன் பாய்ந்தே இந்த நபர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர் 2 பிள்ளைகளின் தந்தையான வேலு சந்திரபோஸ் (வயது 40) கொட்டகலை டிரேட்டன் கே.ஓ பிரிவை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் மரண விசாரணைகளின் பின் கொட்டகலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments