ரஜினியின் 2.0 படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கா!!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

0
108

ரஜினியின் 2.0 படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கா!!! ரஜினியின் 2.0

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் படம் 2.0. இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பைக் கூட்டியுள்ள படமாகும்.

தமிழ் சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் ரஜினியின் 2.0 ஆகும். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட வேலையானா போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இப்படம் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த எந்திரன் படத்தின் 2ம் பாகமாகும். ரஜினியின் 2.0

இப்படத்தில் படத்தில் அதிகளவு 3D தொழில்நுட்ப வேலைகள் அதிகமாக இருப்பதாக படக் குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அக்டோபர் மாதம் துபாயிலும், டீசரானது நவம்பர் மாதம் ஹைதராபாத்திலும், ட்ரைலர் டிசம்பர் மாதம் சென்னையிலும் வெளியாக இருப்பதாக படக்குழுவினரின் நெருங்கிய வட்டாரத்திலிருந்து செய்திகள் கசிந்துள்ளது. ரஜினியின் 2.0

கூடுதலாக படமானது பொங்கலுக்கு திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் செய்திகள் கசிந்தாலும் இறுதியில் படத்தினைப் பற்றி முடிவெடுப்பது இயக்குநரையும், தயாரிப்பாளரையுமே சார்ந்துள்ளது. அவர்களின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் இன்னும் சில தினங்களில் வெளிவரும் என எதிர் பார்க்கலாம். ரஜினியின் 2.0

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments