யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை துயர்மிக்க நிகழ்வு : ஜனாதிபதி கவலை

0
696

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவம் போன்ற போதைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் இணைந்த நிகழ்வுகள் துயர்மிக்கவை எனத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

மேலும் இவ்வாறான அச்சம் மிகுந்த போதைப்பொருட்களுடன் தொடர்பான பல குற்றச்செயல்கள் நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்.புங்குடுதீவு

இவ்வாறான அசாதாரண நிகழ்வுகளுக்கு இனிமேலும் இடமளிக்க முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, போதைப்பொருட்களற்ற நாடு எனும் எண்ணக்கருவை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி அவ்வாறான ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாணந்துறை நகர சபை விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ‘போதைப்பொருட்களற்ற நாடு’ தேசிய செயற்திட்டத்தின் களுத்துறை மாவட்ட நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சட்டவிரோத போதைப்பொருள் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களைப் பாராட்டுவதற்கும், ஊக்கப்படுத்துவதற்கும், அவர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட வரப்பிரசாதங்களை வழங்கவும், பதவி ஏற்றத்தின்போது விதந்துரைகளை வழங்கவும் பொருத்தமான திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

யாழ்.புங்குடுதீவு

போதைப்பொருட்களற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய செயற்திட்டத்தை மேலும் பலப்படுத்தும் வகையில் மேலதிக செயற்பாடுகள் பல எதிர்வரும் சில மாதங்களில் ஆரம்பிக்கப்படும்.

போதைப்பொருட்கள் தொடர்பாக சமூகத்தில் காணப்படும் கசப்பான அனுபவங்களை எதிர்கால சந்ததியினருக்கு வழங்காது நாட்டையும், சமூகத்தையும் போதைப்பொருளின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அரசு என்ற வகையில் சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன” – என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments