யாழ் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது

0
25

யாழ் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழகத்தில்

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலமையை கவனத்தில் எடுத்து அவர்களின் விடுதலையை துரிதப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக அனைத்து பீடங்களின் மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆகியன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த போராட்டம் இன்று காலை பத்து மணியளவில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் நடைபெற்றது.

வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றுவரும் தமது வழக்குகளை வேறு பிரதேசத்திற்கு மாற்றுவதை கண்டித்தும் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுடன் தம்மை தடுத்துவைப்பதை எதிர்த்தும் தமிழ் அரசியல் கைதிகள் மூன்று கடந்த ஒன்பது நாட்களாக சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவரகின்றனர்.

இந்நிலையில் அவர்களது கோரிக்கையை அரசு கவனத்தில் எடுத்து அதை நிறைவேற்றி வைப்பதுடன் சிறைச்சாலைகளிலுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாபட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் பெரும் எண்ணிக்கையிலான பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரையாளர்கள் கல்விசாரா ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினையும் அரசியல் கைதிகளிற்கான ஆதரவினையும் வெளியிட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments