யாழ்.நாவற்குழி பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதனால் போக்குவரத்து பாதிப்பு

0
476

யாழ்.நாவற்குழி பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதனால் போக்குவரத்து பாதிப்பு.

யாழ்.நாவற்குழி பாலத்தில்

யாழ்.குடா நாட்டில் தற்போது பெய்துவரும கடும் மழை காரணமாக நாவற்குழி பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதனால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

கடந்த 2 ஆம் திகதி முதல் பெய்துவரும் மழையினால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, நாவற்குழி பாலம் நிரம்பி வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

யாழ்.நாவற்குழி பாலத்தில்

போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ளன. நாவற்குழி பாலம் கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வருகின்றமையினால், பாலத்தின் பல பகுதிகள் உடைவடைந்து காணப்படுகின்றன.

இதனால் வெள்ளம் வீதியில் பெருக்கெடுத்துள்ளது. இன்னும் மழை தொடர்ந்தால் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடையும் நிலை ஏற்படலாம் என்றும் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

யாழ்.நாவற்குழி பாலத்தில்யாழ்.நாவற்குழி பாலத்தில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com