யாழ். துப்பாக்கி பிரயோகம் : இருவர் கைது!

0
82

நல்லூரில் வைத்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக, கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இளஞ்செழியனின் பாதுகாப்பு பொலிஸார் மீது நேற்று மாலை (22) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது காயமடைந்த, பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை இவர் மரணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Ilancheliyan

இளஞ்செழியன் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரது பாதுகாப்பு பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

இதன்போது, நல்லூர் தெற்கு வீதி பகுதியில் பாதுகாப்பு பொலிஸாரை வழி மறித்து தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் அவர்களுடைய துப்பாக்கியை பறித்து அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது இரு பொலிஸாரும் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments