யாழ். கோப்பாய் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

0
27

யாழ். கோப்பாய் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ். கோப்பாய் பகுதியில் 2 லட்சம் பெறுமதியான 2 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் கஞ்சா பொதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற வேளையில், யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை (19.11) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி தாளையடிப் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய கஞ்சா பொதிகளை விற்பனை செய்வதற்காக கோப்பாய் பகுதிக்கு கொண்டு சென்ற வேளையிலேயே; யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றதாகவும் விசேட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com