யாழ்.உதயபுரம் பகுதியில் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு

0
55

யாழ்ப்பாணம், யாழ்.உதயபுரம் பகுதியில் சிவில் உடையில் வந்தவர்கள் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.

யாழ்.மணியம்தோட்டம் உதயபுரம் முதலாம் வட்டாரத்தில் இன்று (22.10) மதியம் வீதியால் சென்று கொண்டிருந்த வேளை துப்பாக்கிச் சூடு இடம்பெறவுள்ளது.

அதே இடத்தினைச் சேர்ந்த டொன் போஸ்கோ ரிக்டர் வயது 24 என்ற இளைஞரே மீதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இளைஞரின் மார்பின் மீது பட்ட துப்பாக்கி ரவைகள் நெஞ்சை துளைத்து வெளியே வந்துள்ளது.

யாழ்.உதயபுரம்
இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சூட்டு சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement