யாழ்ப்பாணம் கோப்பாய் கைதடி வீதியில் பாலத்தடியில் முதியவர் ஒருவரின் சடலம்

0
48

யாழ்ப்பாணம் கோப்பாய் கைதடி வீதியில் பாலத்தடியில் முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கிறது.

NP-HP-6340 இலக்க மோட்டார் சைக்கிளில் வந்த சங்கத்தானை சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய கனகரட்னம் கோணேஸ்வரன் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டராவார். இவர் யாழ் சாவகச்சேரி சகலகலாவல்வி ஆரம்பபாடசாலையின் ஆசிரியருமாவார்.

யாழ்ப்பாணம் கோப்பாய்

இவர் நேற்றிரவு 9 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

சம்பவம் விபத்தா கொலையா தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணம் கோப்பாய்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com