யாழ்ப்பாணத்தில் போலி விமானப் பயண சீட்டு வழங்கிய முகவரை கைது செய்ய நடவடிக்கை

0
35

யாழ்ப்பாணத்தில் போலி விமானப் பயண சீட்டு வழங்கிய முகவரை கைது செய்ய நடவடிக்கை

போலி விமானப் பயண சீட்டு

யாழ்ப்பாணத்தில் உள்ள வௌிநாட்டு பயண முகவர் நிறுவனம் ஊடாக போலிய விமானப் பயண சீட்டு கொடுக்கப்பட்டு இந்தியா செல்லவிருந்த பயணி ஒருவரிடம் 1 இலட்சத்து 28 ஆயிரும் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு செல்வதற்கான 3 விமான பற்றுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்காக யாழ்பாணத்தினைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாண கோவில் வீதியில் இயங்கி வந்த முகவர் ஒன்றின் உதவியினை நாட்டியுள்ளார்.

விமானப் பற்றுச்சீட்டினை வழங்குவதற்காக குறித்த முகவரகத்தினால் முற்பணமாக 45 ஆயிரும் ரூபா கோரப்பட்டுள்ளது.

இதன்படி, அவர் 45 ஆயிரம் ரூபாவுக்காக வங்கி காசோலை ஒன்றினை வழங்கியுள்ளார்.

கடந்த மாதம் குறித்த காசோலையுடாக அந்த முகவர் நிறுவனத்தின் உரிமையாளர் பணத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதன் பின்னர் மீண்டும் முகவர் நிறுவனம் ஊடாக பணம் கோரப்பட்ட நிலையில், 82 ஆயிரும் ரூபாவுக்காக காசோலை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சாசோலையினை வங்கி ஊடாக பணத்தினைப் பெற்றுக் கொள்ளாமல் வேறு ஒருவரிடம் கொடுத்து, குறித்த முகவர் நிறுவன உரிமையாளர் பணத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பணத்தினைப் பெற்றுக் கொண்ட பின்னர் இந்தியாவிற்கான விமான பயணத்திற்கான 3 போலி பற்றுச்சீட்டினை வழங்கியுள்ளார்.

குறித்த போலி பற்றுச் சீட்டினை கொண்டு சென்று இந்திய தூதரக அதிகாரிகளிடம் சென்ற போது அது போலி பற்றுச்சீட்டு என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் குறித்த முகவர் நிறுவன உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது, அது போலி விமானப் சீட்டு என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பணத்தினை மீள கையளிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர் நேற்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சென்று குறித்த முகவர் நிறுவன நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த முகவர் நிறுவன உரிமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement