யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சுனாமி அனர்த்த வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன

0
67

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சுனாமி அனர்த்த வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன

சுனாமி அனர்த்த வதந்திகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் சுனாமி அனர்த்தங்கள் தொடர்பான செய்திகள் பரவினால் உடனடியாக 117 என்ற இலவச அவரச தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அனர்த்தம் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை பெற்றுக்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவத்தின் உதவிப் பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் அண்மைய நாட்களாக சுனாமி அனர்த்த வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்படுவதுடன் இடம்பெயர்கின்ற சூழ்நிலைகளும் நிகழ்ந்துள்ளன.எனவே இவ்வாறான பொய்யான தகவல்களை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம்.

பொதுமக்கள் மத்தியில் ஏதாவது இயற்கை அனர்த்தம் தொடர்பான தகவல் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக இலவச அவசர தொலைபேசி இலக்கமான 117 என்ற இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி உங்கள் பிரதேசங்களில் இயற்கை அனர்த்த பதிப்புக்கள் ஏதாவது உள்ளனவா?அல்லது அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா? என உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com