யாழில் ஐந்து முறைப்பாடுகள்

0
16

யாழில் ஐந்து முறைப்பாடுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சம்பந்தமாக யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குள் இடம்பெற்ற 05 சட்டவிரோத சம்பவங்கள் குறித்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் கூறியுள்ளார்.

சாவகச்சேரி, பருத்தித்துறை, உடுவில், சண்டிலிப்பாய் மற்றும் வேலனை ஆகிய பிரதேசங்களில் இருந்து இந்த முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பொது இடங்களில் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை சம்பந்தமாக மூன்று முறைப்பாடுகளும், அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோதமாக ஒரு கட்சி அலுவலகத்தில் நுழைதல் சம்பந்தமாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

முறைப்பாடுகள் சம்பந்தமாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு அது சம்பந்தமாக விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement