மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு இராணுவத்தில் முக்கிய பதவி! – யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி

0
12

இலங்கை இராணுவத்தின் முக்கிய பதவிக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐ.நாவின் முன்னாள் நிபுணரான யஸ்மின் சூக்கா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்தின் 58வது படைப்பிரிவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார்.யஸ்மின் சூக்கா

 

 

 

 

 

 

 

 

குறித்த படைப்பிரிவு பெருமளவான போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்ததாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும், போர் முடிந்த பின்னர், சவேந்திர சில்வா இராஜதந்திர சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்கான வதிவிடப் பிரதிநிதி பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இராணுவத்தின் எஜுடன்ட் ஜெனரல் எனப்படும் இராணுவத் தலைமையக பிரதம நிர்வாக அதிகாரி பதவி சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உயர் அதிகாரிகளுள் ஒருவரான யஸ்மின் சூக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் இது குறித்து ஐக்கிய- நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் ரஆத் ஹுசைனிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

போர்க்குற்றங்களில் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளுக்கு உயர் பதவிகள் வழங்குவதில்லை என்ற உடன்பாட்டை இலங்கை மீறி விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments