மோட்டர் விபத்து : ஒருவர் உயிரிழப்பு

0
27

நானுஓயா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட நானுஓயா டெஸ்போட் மேற்பிரிவுத் தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் கடும் காயங்களுடன் நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தோட்டத்தில் இடம்பெற்ற ஆலய திருவிழாவில் கலந்துகொண்டு இருவரும் மோட்டார் சைக்களில் பணித்த போதே வேக கட்டுப்பாட்டை இழந்து பாதையிலிருந்து விலகி தோட்டத்தில் லயக்குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் நுவரெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

விபத்து

இந்த விபத்து சம்பவத்தால் குறித்த தோட்டத்தில் இடம்பெறவிருந்த ஆலய தேர் திருவிழாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement