மோடியின் வருகைக்கு நாங்கள் எதிர்ப்பில்லை எட்கா உட்ன்படிக்கைக்கு எதிர்ப்பு : மஹிந்தவின் கருத்து

0
107

மோடியின் வருகைக்கு நாங்கள் எதிர்ப்பில்லை. ஆனால், இந்தியாவுடன் பாரதூரமான உடின்படிக்கையான எட்காவை செய்துகொள்ள கடும் எதிர்ப்பு என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

செவாக் தினத்தை முன்னிட்டு நேற்று கண்டி தளதா மாளிகையில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு திரும்பும் போது ஊடகவியலாளர்கள் எழுப்பி கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

இந்திய பிரதமரின் இலங்கை வருகைக்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இந்தியாவுடன் சுமூகமான உறவை பேணுவது அவசியமாகும். ஆனால், இந்தியாவுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்வது தொடர்பில் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

இலங்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் எவ்விதமான ஒப்பந்தத்தையும் ஏற்படுத்திக்கொள்ள நாங்கள் அனுமதியளிக்கப் போவதில்லை. இதேவேளை, மாகாண சபைகளை கைப்பறிக்கொள்ள நான் சூழ்ச்சி செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரிக்கின்றேன். எவ்வாறு எவ்விதமான சூழ்ச்சியையும் நான் மேற்கொள்ளவில்லை. தேர்தலை அரசு நடத்தும் போது மக்கள் உரிய தீர்வை வழங்குவார்கள் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments