மோடியின் மலையக விஜயம் : நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்தார் ரஞ்சித் சிங் சந்து

0
42

மோடியின் மலையக விஜயம் பாதுகாப்பு, விழா ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய விரைந்தது இந்திய உயர்ஸ்தானிகர் குழு.

இந்தியா அரசின் நிதி உதவியில் நவீன வசதிகளுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தை திறந்துவைப்பதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி மலையகத்திற்கு இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி வருகை தரவுள்ளார்.

இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் முன்னேற்பாடுகளை ஆராய்வதற்காகவும், இந்திய உயர்ஸ்தானிகர் ரஞ்சித் சிங் சந்து மற்றும் இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இன்று காலை 11 மணியளவில் இந்திய உலங்கு வானூர்தி மூலம் தரையிரங்கி ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டனர்.

இவர்களை ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய உறுப்பினர்களான கணபதி கணகராஜ், சத்திவேல், பிலிப்குமார் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் வரவேற்றனர்.
இந்திய உயர்ஸ்தானிகருடன், இந்திய பொலிஸ் பாதுகாப்பு துறையின் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட பாதுகாப்பு குழுவினர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்குச் சென்று அங்கு நரேந்திர மோடியை வரவேற்பதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், பாதுகாப்பு நிலவரங்கள் போன்றவற்றை அவதானித்தனர். இதன்போது யாழ்ப்பாண இந்திய தூதரக உதவி தூதுவர் ஏ.நடராஜன் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் பொது மக்களை சந்திக்கவுள்ள நோர்வூட் விளையாட்டு மைதானத்தையும் பார்வையிட்டு அங்குள்ள நிலவரங்களையும் ஆராய்ந்தனர்.

150 கட்டில்கள் உட்பட 6 சத்திர சிகிச்சை நிலையங்கள், 3 அவசர சிகிச்சை பிரிவு, மின்தூக்கி வசதிகள் உட்பட பல வசதிகள் இந்த வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments