மொட்டை கைவிட்டு ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் தொண்டமான்

0
277

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயார் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் தொண்டமான், இன்று மேற்கொண்ட சந்திப்பின் போது இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சேர்ந்து உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டதாக அறிவித்திருந்தது.

இந்தநிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடிய பின்னர் அக்கட்சி தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com