மொட்டுக்கு ஆதரவளித்த உறுப்பினர்களுக்கு ஆப்பு

0
311
மொட்டு

தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வளர்ச்சியடைய உதவிய ஒன்றிணைந்த எதிரணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடையே பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கையின் ஊடாக அவ்வாறான உறுப்பினர்கள் 45 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கபடவுள்ளதுடன், அவர்களுள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதவி விலக்கப்படும் உறுப்பினர்களுக்கு பதிலான அடுத்துள்ளவர்களை நியமிக்கும் அதிகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருக்கு உள்ளதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com