மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய குழு தீர்மானம்

0
38

கண்டியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடத்தும் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாது வேறு தலைவர்கள் நடத்து கூட்டத்தில் சு.கவின் உறுப்பினர்கள் எவரும் கலந்துகொண்டால் நடவடிக்கை எடுக்க சு.கவின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது என்று இராஜங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள சு.கவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மே தினக்

அவர் மேலும் வலியுறுத்தியதாவது,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல மக்கள் பிரதிநிதிகளுக்கும் கண்டியில் நடைபெறவுள்ள மேதினக் கூட்டத்தில் கலந்துகொள்ள எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க அந்த மேதின கூட்டத்திற்கு வராது வேறு மேதின கூட்டங்களுக்கு யாரும் செல்ல கூடாது என்று கட்சியின் மத்தியச் செயற்குழு தீர்மானித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூடித்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது. சு.கவின் மேதின கூட்டத்திலேயே கட்சியின் சகல எம்.பிக்களும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்துக்கொள்ள வேண்டும். அனைவருக்கும் எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்திற்கு வராது எவரேனும் வேறு தலைவர்கள் நடத்தும் மற்றும் கட்சிகளின் கூட்டத்திற்குச் செல்பர்கள் தொடர்பாக கட்சியின் மத்திய செயற்குழு நடவடிக்கை எடுக்கும். குறித்த நடவடிக்கை எவ்வாறு அமையும் என்று தீர்மானிக்கப்படவில்லை என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com