மேற்பார்வை அரசாங்கம் அமைக்குமாறு ஜனாதிபதியிடம் விரைவில் பேச்சு

0
34
மேற்பார்வை அரசாங்கம்

புதிய பிரதமர் தலைமையிலான மேற்பார்வை அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோருவதற்கு முடிவு செய்துள்ளது.

அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரைக்கும் இந்த மேற்பார்வை அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனையை இந்த அமைச்சர்கள் முன்வைக்கவுள்ளனர்.

“உள்ளூராட்சித் தேர்தல்கள் முடிந்த பின்னர், இந்த மேற்பார்வை அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை தாம் ஜனாதிபதியிடம் முன்வைக்கவுள்ளதாக, இதுதொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர் ஒருவர் கருத்து வெளியிடுகையில் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விசாரணை அறிக்கையில் பிரதமர் மற்றும் ஐதேக அமைச்சர்கள் பலருக்கு இருக்கும் தொடர்புகள் குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் மேற்பார்வை அரசாங்கம் ஒன்றை அமைப்பதே விவேகமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் இதுகுறித்தும் தாம் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அந்த அமைச்சர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com