மெஸ்சியின் அதிரடி கோல்களால் பார்சிலோனா வெற்றி

0
36

மெஸ்சியின் அதிரடி கோல்களால் பார்சிலோனா லா லிகா கால்பந்து தொடரில் இரண்டு தோல்விக்குப்பின் வெற்றிக்கு திரும்பியுள்ளது.

மெஸ்சியின்

கால்பந்து முன்னணி கிளப் அணிகளில் ஒன்று பார்சிலோனா. மெஸ்சி, நெய்மர், சுவாரஸ் போன்ற தலைசிறந்த கால்பந்து வீரர்கள் பார்சிலோனா அணியில் விளையாடி வருகிறார்கள். கடந்த வாரம் நடைபெற்ற லா லிகா தொடரில் மலாகாவிற்கு எதிரானப் போடடியில் 02 என தோல்வியடைந்தது. அதன்பின் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதி முதல் லெக்கில் யுவான்டஸ் அணி பார்சிலோனாவை 30 என வீழ்த்தியது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற லா லிகாகவில் ரியல் சோசியேடாட் அணியை பார்சிலோனா எதிர்கொண்டது. இதில் பார்சிலோனா 32 என வெற்றிபெற்றது. நட்சத்திர வீரர் மெஸ்சி இரண்டு கோல்கள் அடித்ததுடன், 3ஆவது கோல் அடிக்க உதவிகரமாகவும் இருந்தார்.

இரண்டு தோல்விக்குப்பின் இந்த வெற்றி பார்சிலோனாவிற்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது. பார்சிலோனா அடுத்து லா லிகாவில் ரியல் மாட்ரிட் அணியையும், ஐரோப்பிய சாம்பியன் லீக் 2ஆவது லெக்கில் யுவான்டசையும் எதிர்கொள்கிறது.

ரியல் மாட்ரிட் ஸ்போர்ட்டிங் சிஜோனுக்கு எதிராக போட்டியில் 32 என வெற்றிபெற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com