மெர்சல் – விவேகம் படங்களை கைப்பற்றிய நிறுவனங்கள் எது தெரியுமா?

0
118

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற ஆகஸ்ட் 24-ஆம் திகதி வெளியாக இருக்கும் படம் ஹவிவேகம்’. படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டது முதல் படம் குறித்து ஒவ்வொரு நாளும் ருசீகரமான தகவல் வந்த வண்ணம் உள்ளது. இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

அதேபோல், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் ஹமெர்சல்’. தீபாவளியை ஒட்டி ரிலீசாக இருக்கும் இப்படத்தின் மீதும் ரசிகர்களிடையே அதீத எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மெர்சல் விவேகம்

இவ்வாறாக ஹவிவேகம்’, ஹமெர்சல்’ ஆகிய இரு படங்கள் குறித்தும் அவரது ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டாக்கி வரும் நிலையில், இந்த இரு படங்களின் தொலைக்காட்சி உரிமையை தமிழகத்தின் இருபெரும் நிறுவனங்கள் கைப்பற்றி இருக்கின்றன. ஹவிவேகம்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டி.வி.யும்இஷ, ஹமெர்சல்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜி தமிழ் டி.வி.யும் கைப்ற்றியிருக்கிறது.

இந்நிலையில், விஜய்யின் ஹமெர்சல்’ படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘ஆளப்போகிறான் தமிழன்’ என்ற மாஸான பாடல் இன்று ரிலீசாக விஜய் ரசிகர்களுக்கு விருந்து படைக்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com