முஸ்லிம்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்போம்” கிழக்கில் வாழ்வுரிமைப் பொதுக் கூட்டம்

0
31

“முஸ்லிம்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்போம்” எனும் தொனிப் பொருளில் வாழ்வுரிமைப் பாதுகாப்பு விளக்க பொதுக் கூட்டம் கிழக்கில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா அத் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி பரவலான சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை 13.10.2017 மாலை 4 மணியிலிருந்து இருந்து இரவு 10 மணிவரை ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் இடம்பெறவுள்ள இந்தப் பொதுக் கூட்டத்தில் கூடவே “தவ்ஹீத் ஜமா அத்தின் சமுதாயப் பணிகள்” பற்றியும் விரிவான விளக்கம் அளிக்கப்படவுள்ளதாகவும் அந்தப் பிரசுரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com