முள்ளிக்குளம் மக்கள் எட்டாவது நாளாகவும் நிலமீட்புப் போராட்டத்தில்

0
76

முள்ளிக்குளம் எட்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்படையினரிடம் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரியே இந்த மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கடற்படையால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 23 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டத்தை தொடங்கினர். இந்தப் போராட்டம் முள்ளிக்குளம் கிராம நுழைவாயிலில் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயரின் இல்லத்திற்குச் சொந்தமான 53 ஏக்கர் காணியில் குடியிருந்த முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி கடற்படையால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

முள்ளிக்குளம்

இதனால் 350 குடும்பங்கள் இடம்பெயர்ந்ததுடன், மலங்காடு என்னும் காட்டு பிரதேசத்தில் 176 குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி குடியமர்ந்துள்ளனர். மலங்காடு பிரதேசத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் காயாக்குழி என்னும் இடத்தில் 92 குடும்பங்கள் குடியமர்ந்துள்ளனர்.

யுத்தகாலத்தில் தமிழகத்திற்கு இடம்பெயர்ந்த பல குடும்பங்கள் தமது காணிகள் விடுவிக்கப்பட்டால் நாடுதிரும்புவோம் எனவும், தமது காணிகள் விடுவிக்கப்படாவிட்டால் தாயகம் திரும்பும் தாம் அங்கு குடியமர்வது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முள்ளிக்குளம் பாடசாலை கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்துடன், அந்த கிராமத்தைச் சேரந்த மாணவர்கள் கடற்படையினரின் பேரூந்தில் பாடசாலைக்குச் சென்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு மன்னார் விடத்தல்தீவு கிராம மக்கள் நேரடியாக விஜயம் செய்து ஆதரவு வழங்கியுள்ளனர். அத்துடன், அருட்தந்தையர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிக்குளம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com