முருகன் ஆலயத்தை ஆக்கிரமிக்க முயற்சி

0
35
முருகன் ஆலயத்தை

புராதன பௌத்த எச்சங்கள் இருப்பதாக கூறி, திருகோணமலை- சம்பூர், சூடைக்குடா முருகன் ஆலயம் அமைந்துள்ள பகுதியை தொல்பொருள் திணைக்களம் விரைவில் சுவீகரிக்கவுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் மந்தவெல, இதனைத் தெரிவித்துள்ளார்.

“சம்பூர் சூடைக்குடா செதிய அமைந்துள்ள பகுதியை பாதுகாப்பதற்காக அந்தப் பகுதி விரைவில் தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்படவுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கிழக்கில் மத மற்றும் தொல்பொருள் சின்னங்களை அடையாளம் காணும் நடவடிக்கையின் போதே, பழைமையான பௌத்த வழிபாட்டு சின்னம் சம்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் பிரதேசம் தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என திணைக்களம் பிரகடனம் செய்வதற்கு முன்னரே, பௌத்த வழிபாட்டு சின்னம் மற்றும் அதன் சுற்றுப் பகுதி்கள் அழிக்கப்பட்டு விட்டன” என்றும் இவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement