மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது புனே சுப்பர்ஜெயன்ட்

0
56

மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது புனே சுப்பர்ஜெயன்ட் அணி.

ஐ.பி.எல். தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரைசிங் புனே சுப்பர்ஜெயன்ட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மும்பை வங்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய புனே அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்களை பெற்றது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக திவாரி 58 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மும்பாய் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. இதனால் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியடைந்தது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக பார்தீவ் பட்டேல் 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வொஷிங்டன் சுந்தர், போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com