முன்னாள் போராளிகள் 7 பேருக்கு கடூழியச் சிறை

0
51

முன்னாள் போராளிகள் 7 பேருக்கு கடூழியச் சிறை

முன்னாள் போராளிகள்

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 7பேருக்கு அநுராதபுர மேல் நீதிமன்ற நீதிபதி, தலா 8 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

வில்பத்து சரணாலயத்தில் 2006ஆம் ஆண்டு கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தி 7 பேரைக் கொலை செய்தமை உள்ளிட்ட 8 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரும், நீதிமன்றத்தில் தமது குற்றங்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அதனையடுத்து, அநுராதபுர சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று அவர்களுக்கு தலா 8 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement