முதல் இன்னிங்ஸில் 622 ஓட்டங்கள் இலங்கைக்கு இலக்கு

0
36

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிற்காக இந்தியா 622 ஓட்டங்களை குவித்துள்ளது.

முதல் இன்னிங்ஸில்

நேற்று கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி, 622 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் தனது முதலாவது இன்னிஸை நிறுத்தி இலங்கை அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.

முதல் இன்னிங்ஸில்

இந்திய அணி சார்பில் புஜாரா 133 ஓட்டங்களையும், ரஹானே 132 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி பெற்றுக்கொண்ட 622 ஓட்டங்களை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

முதல் இன்னிங்ஸில்

இன்றைய ஆடநேர முடிவின் போது இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments