முக்கிய நாடுகளின் தலைவர்களுடன் அடுத்தவாரம் பேச்சு – ஜனாதிபதி

0
26
முக்கிய நாடுகளின் தலைவர்களுடன் அடுத்தவாரம் பேச்சு – ஜனாதிபதி
முக்கிய நாடுகளின் தலைவர்களுடன்
முக்கிய நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் பேச்சு நடத்தவுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத்தொடர் நிவ்யோர்க்கில் இடம்பெற்றுவருகிறது.
அதில் பங்கேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்கா செல்லவுள்ளார்.
இந்தக் கூட்டத்தொடரில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ள மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்தப் பயணத்தின் போது, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி  பேச்சு நடத்துவார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.