மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாரபட்சமற்ற நஷ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்

0
52

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாரபட்சம் பாராது நஷ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இன்று நாடாளுமன்றில் வலியுறுத்தினார்.

இன்று காலை மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட மக்களுக்கு உரிய விவாரம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், முறையான குப்பை நிர்வாக முறைமையை ஏற்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீது கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

குப்பைக் கூளங்கள் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

கழிவு முகாமைத்துவம் குறித்து விசேட வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் முறையாக முன்னெடுக்க வேண்டும். அரசியல் வேறுபாடுகளை களைந்து இதுவிடயம் குறித்து செயலாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com