மீண்டும் டெங்கு நோய்

0
32

டெங்குதற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மீண்டும் டெங்கு நோய் வியாபிக்கக்கூடிய நிலை இருப்பதாக தேசிய டெங்கு நோய் தடுப்புப் பிரிவின் சமூக விசேட வைத்தியர் திருமதி பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வருடத்தில் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு குறைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விசேடமாக சுகாதாரப் பிரிவு மற்றும் பொதுமக்கள் நிறைவேற்றிய பணிகளுடன் மழையும் குறைவடைந்தமையே இதற்குக் காரணமாகும். இருப்பினும், தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மீண்டும் டெங்கு நோய் வியாபிக்கக்கூடிய நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால், இது குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் தேசிய டெங்கு நோய் தடுப்புப் பிரிவின் சமூக விசேட வைத்தியர் திருமதி பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement