மீண்டும் இலங்கையில் பெற்றோலுக்கு தட்டுப்பாடா?

0
64

மீண்டும் இலங்கையில் பெற்றோலுக்கு தட்டுப்பாடா?

பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவே மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து நேற்று மாலையில் இருந்து கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன வரிசைகளை காணக்கூடியதாக இருந்தது.

இது தொடர்பிலேயே கூட்டுத்தாபனம் அந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பில் பெற்றோலிய அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்கவை தொடர்பு கொண்டு வினவியபோது, போதுமான அளவு பெற்றோல் கையிருப்பில் இருப்பதாக குறிப்பிட்டார்.

அத்துடன் நாளை அல்லது நாளை மறுதினம் மற்றுமொரு கப்பல் இலங்கையை வந்தடையும் எனவும், பெற்றோலுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக வெளியாகும் தகவல் பொய்யானது எனவும் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement