மியன்மார் அகதிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – மேலும் இருவரை கைது செய்து விசாரணை

0
34
மியன்மார் அகதிகளுக்கு கல்கிஸை பிரதேசத்தில் மியன்மார் ஏதிலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேரை கைது செய்வதற்கான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு ஆரம்பித்துள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
அரபேபொல ரதனசார தேரர் மற்றும் ப்ரகீத் சானக எனப்படும் வாத்துவை பிரதேசத்தை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரதன தேரர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Advertisement